கொவிட் நிலைமைகளை தெரிந்து கொண்டே இந்த அரசாங்கம் மக்களை கஷ்டத்திற்குள் தள்ளியுள்ளது. கொவிட் நடவடிக்கைகளைக்குத் தோவையான போதிய நிதிகளை ஒதுக்கியுள்ளதாக நாமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் தொற்றாளர்களின் சரியான எண்ணிக்கையையும் மரணிக்கும் எண்ணிக்கையையும் இந்த அரசாங்கம் மறைத்து வருகிறது. இத்தகைய பெறுப்பற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்காகவா மக்கள் கோட்டாபயவை ஜனாதிபதியாக நியமித்தனர் என பாராளுமன்ற உறுப்பினர் ஹெஷா விதானகே கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று(05) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற நடவடிக்கை ஜனநாயக விரோதமான நடைமுறைகளை நோக்கி செல்கிறது. சபாநாயகர் ஜொன்ஸ்டன் மற்றும் தினேஷ் குணவர்தன ஆகிய இருவரினதும் முடிவுகளின் பிரகாரமே செயற்படுகின்றார். பாராளுமன்ற சுயாதீனத்திற்கு முற்றிலும் மாற்றமான செயன்முறைக்கே சென்றுள்ளார்.நாட்டில் அரசியல் வரலாற்றில் தோன்றிய மிக மோசமான சபாநயகராக இன்றைய சபாநாயகர் இருக்கிறார். சமூக ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்படுகிறார். சபாநாயகரின் நடவடிக்கை பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு பாரிய சவாலாக அமைந்து காணப்படுகிறது. இன்றைய பாராளுமன்ற அமர்விலும் சரத் வீரசேகரவின் கருத்தை ஒப்புக் கொண்ட விதமாக செயற்பட்டார்.ரிஷாட் பதியுதீனின் பாராளுமன்ற சிறப்புரிமையை வழங்க மறுக்கும் விதத்தில் செயற்படுகின்றார்.
கோவிட் பரவல் ஏற்ப்பட்டு அந்தந்தப் பிரதேசங்களுக்கு ஏற்ப உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டல்களில் நடைமுறைகள் பின்பற்ற தீர்வுகள் எடுக்கப்படும் போது பிலியந்தலையில் ஒருவர் தனிமைப்படுத்தலிலிருந்து அந்தப் பிரதேசத்தை விடுவிக்கிறார்.விடுவித்தமை சுகாதார அமைச்சின் செயலாளாருக்கும் தெரியாமல் போகிறது.இது அரசியல் ரீதியான முடிவுகளாகும்.சுகாதார தரப்பு அவதான அடிப்படையில் முடிவுகளை பிரப்பிக்கும் போது எந்த தொடர்புகளும் அற்ற அரசியல்வாதிகள் ஒரு பிரதேசத்தை விடிவிப்பது என்பது என்ன நடைமுறை என்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
ரிஷாட் பதியுதீனை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக்காவலை நீடித்து பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்கும் அப்பால் சென்று செயற்பட முற்படுவது ஜனநாயகத்திற்கு ஏற்ப்பட்ட பாரிய சவாலாகும். இவ்வாறு ரிஷாட்டை கைது செய்து,பூஜித்த ஜயசுந்தரவுக்கு 800 க்கும் அதிகமான முறைப்பாடுகளை பதிவு செய்து காதினலின் குரலை மௌனப்படுத்தவே முயற்சிக்கின்றனர். இது அங்கீகரிக்க முடியாத செயற்பாடாகும். இது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு சட்டத்தை பிரயோகப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
இன்று பயிர் செய்கைகளுக்கான உரங்களை ஒரே தடவையில் தடை செய்துள்ளனர்.இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது சாதாரண மக்களாகும்.இன்று ஏற்ப்ட்டுள்ள கோவிட் நிலமைகளால் தமது அடிப்படை வருமானத்திற்குரிய மூலமான விவசாயம் மற்றும் சிறு தோட்டச் செய்ககளுக்கும் உரம் இல்லாமை பாரிய வருவாய் இழப்பை அவர்களுக்கு ஏற்பட்டுத்தும். எனவே இத்தகைய ஒரு தலைபட்சமான அறிவற்ற தீர்மானங்களை அரசாங்கம் மீள பரிசீலிக்க வேண்டும். கொம்போஸ் பசளை உருவாக்கம் குறித்த எந்த நடைமுறை ஏற்பாடுகளுக்கும் செல்லாமல் உரம் இறக்குமதியை தடை செய்தமை அரசாங்கத்தின் தூர நோக்கற்ற எண்ணப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இந்த உரத்தடையும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு டொலரை பாதுகாக்க எடுக்கப்ட்ட உடனடி அரசியல் தீர்வாகவே நாங்கள் பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.