சீன அதிபருடன் பைடன் பேச்சு – மோதலைத் தவிர்க்க அதிரடித் தீர்மானம்!

Date:

ஐரோப்பாவில் நேட்டோ படைகளை வைத்திருப்பதை போல இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா வலுவான இராணுவத்தை நிறுத்தும்.அது மோதலுக்காக அல்ல. மோதலைத் தவிர்ப்பதற்காகவே என்பதை சீன அதிபரிடம் தான் கூறியுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அரசாங்கம் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பைடன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

நான் பதவி ஏற்று 100 நாட்களில் 100 மில்லியன் கொரோனா தடுப்பூசி போடப்படும் என உறுதி அளித்தேன். ஆனால், தற்போது 100 நாட்களில் 220 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளோம்.

அமெரிக்கர்களை பாதுகாப்பதற்கு என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன்.அத்தோடு
அமெரிக்க மீண்டும் முன்னேற்றத்தை நோக்கி செல்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...