சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் உள்ள ஜெயலலிதாவின் படத்தை அகற்றும்படி கோரி அந்த உணவகத்தின் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக திமுக அறிவித்துள்ளது.
சென்னையில் முகப்பேர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தை 2-3 மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று சூறையாடும் காட்சிகள் இன்று காலையில் சமூக வலைதளங்களில் வைரலானது. அந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் கையில் தி.மு.க. தலைவரின் படத்தை வைத்திருந்ததால், இதில் ஈடுபட்டவர்கள் தி.மு.கவினர் என உறுதிசெய்யப்பட்டது.இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
“கோவிட் – 19 ஊரடங்கு காலத்தில் பலருக்கும் உணவளித்த உணவகத்தை தி.மு.கவினர் ஆட்சிக்கு வந்தவுடனேயே தாக்குகிறார்கள்” என்ற கருத்துடன் இந்த வீடியோ வைரலானது. பலரும் இந்த நிகழ்வு குறித்து கண்டனங்களைப் பதிவுசெய்தனர்.இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு அ,தி.மு.கவின் டி ஜெயகுமார், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
https://twitter.com/vijayandrewsj/status/1389471361609854976?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1389471361609854976%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.bbc.com%2Ftamil%2Findia-56979380