எதிர்வரும் காலங்களில் இரசாயனப் பசளைகள் பாவிப்பதில்லை என்றும் விவசாயிகள் சேதனப் பசளைக்கு திரும்ப வேண்டும் என்றும் ஜனாதிபதி எடுத்துள்ள முடிவின் காரணமாக சீனாவில் இருந்து தருவிக்கப்பட்ட சுமார் 18 ஆயிரம் மெட்ரிக் தொன் இரசாயனப் பசளைகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின்இந்த முடிவு ஒரு நல்ல முடிவாக இருந்தபோதிலும் உடனடியாக அது சாத்தியப்படுமா என விவசாய சமூகம் கேள்வி எழுப்பி உள்ளது. தற்போதைய நிலையில் பசளை தேவையை சேதனப் பசளைகளால் முழுமையாக பூர்த்தி செய்ய முடியுமா என்பது சந்தேகம் ஆனது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இது மட்டுமன்றி ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே ரசாயன பசலைகளை தருவிப்பதற்கான எந்த வசதிகளையும் கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் பிரகாரம் ரசாயன பசலைகளின் இறக்குமதி தற்போதைக்கு தடைப்பட்டுள்ளது. அதனை ஈடு செய்யும் அளவுக்கு சேதனப் பசளை நாட்டில் கையிருப்பில் உள்ளதா என்பது குறித்து விவசாயிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்