ஜனாஸா தொகை அதிகரிக்கின்றது மக்களே கவனம்!

Date:

Covid ஜனாஸா கையாளும் குழுவினரின் அறிக்கையின் படி

நேற்று 29.05.2021 ம் திகதியுடன் 322 வது ஜனாஸாவும் அடக்கப்பட்டுவிட்டது.

ஜனாஸாவின் வேகத்தையும் புள்ளி விபரத்தையும் நோக்கும் போது சிந்திக்க வேண்டியுள்ளது. நிலமை மிகவும் மோசமடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது.

அதாவது,

1. முதல் 100 (100) ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு ற்கு 56 நாட்கள்

கடந்துள்ள நிலையில்,

2. இரண்டாவது 100 ஜனாஸாக்களை

அடக்கம் செய்வதற்கு 19 நாட்களும்,

3. மூன்றாவது 122 (321) ஜனாஸாக்களை அடக்குவதற்கு வெறும் 08 நாட்களும் போயுள்ளன.

நிலைமை மிகவு‌ம் மோஷமடைந்து வருகிறது மிக மிக அவதானமாக செயற்படுங்கள். முடிந்தவரை துஆக்களில் இருப்போம்.

மரணம் இறைவனின் திட்டமென்றாலும் தொற்றுநோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வது, இறைத்தூதரின் வழிகாட்டலும் நடைமுறையும் ஆகும்*. குஷ்டரோகியைக் கண்டால் விரண்டோடுங்கள் என்பது வாக்கு ; குஷ்டரோகியின் கையைப் பிடிக்காமல் பைஅத் பெற்றது வாழ்க்கை.

எனவே, இந்த சுன்னாவை புறக்கணித்து தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளைப் பேணாது ஒருவர் இந்த நோய்க்கு பலியானால் அது ஷஹாதாவாகாது; மறாக தற்கொலையாகலாம்; அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக.

எனவே, உலமாக்கள் மக்களுக்கு இத்தகைய அசாகான நிலையில் நபிவழியில் மார்க்கத்தை விளக்க வேண்டியது முக்கிய பொறுப்பாகும்.* அரசியல் மற்றும் சமூகத் தலைமைகளும் தமது இந்தப் பொறுப்பை உணர்ந்து சமூகத்தைத்தை அறிவூட்ட முன்வர வேண்டும்.

உங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளையும் உசார்ப்படுத்துங்கள்.

விழிப்புணர்வு குழுக்களை உசார்ப்படுத்துங்கள்.தலைவர்களை உசார்ப்படுத்துங்கள்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...