ஜெரூசலமின் அல் அக்ஸா பள்ளிவாசல் உட்பட ஏனைய இடங்களிலும் இஸ்ரேலிய பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் 178 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதோடு 88பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அல் அக்ஸா பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இஸ்ரேலிய படையினருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையில் கடந்த பல வாரங்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றதோடு கடந்த இரண்டு வாரங்களாக பதட்ட நிலை அதிகரித்துள்ளது.
பாலஸ்தீன குடியேற்றவாசிகள் இஸ்ரேலிய படையினரால் வெளியேற்றப்படுவதை எதிர்த்தே பாலஸ்தீன படையினர் போராடி வருகின்றனர்.கடந்த வாரத்தில் ஷேக் ஜர்ராவில் வசிப்பவர்களும் , பாலஸ்தீனிய மற்றும் சர்வதேச ஒற்றுமை அமைப்புக்களும் தமது ஆதரவை பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக வழங்கியிருந்தனர்.
கடந்த சில நாட்களாக எல்லையில் உள்ள இஸ்ரேலிய பொலிஸார் கண்ணீர்ப் புகை , தோட்டாக்கள் மற்றும் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல்களை நடத்தியதோடு பல இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.