இந்தியாவின் டெல்லியில் அமுலாக்கப்பட்டுள்ள முடக்கநிலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக அமுலாக்கப்பட்ட முடக்கநிலை நாளையுடன் (31) நிறைவடையவிருந்த நிலையில் ஜுன் மாதம் 7ம் திகதி வரை தொடர்ந்து நீடிக்கப்படுமென மாநில அரசு நேற்று அறிவித்துள்ளது.
டெல்லியில் நேற்றைய தினம் 956 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியதுடன் 122 மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.