UPDATE-
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
—————————————————————————————————————————————–
நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு குறித்த பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த இருவரும் கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.