ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரமேதாஸவுக்கும் அவரது மனைவி ஜலனி பிரமேதாஸவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தம்மை சுயதனிமைப்படுத்திக் கொண்டுள்ளதுடன் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்க்கட்சி தலைவருடன் தொடர்புடைய மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.