தரம் 1 இல் 40 மாணவர்களை அனுமதிக்கும் திருத்தத்துடன் அடுத்த வருடம் தரம் ஒன்றில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான புதிய சுற்றறிக்கை இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்திற்கு மேலதிகமாக வதிவிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணம் மற்றும் வேறு சில மாற்றங்கள் உள்ளடக்கியதாக புதிய சுற்றுநிருபம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
தரம் 1க்கான அனுமதிக்காக அடுத்த மாத ஆரம்பம் முதல் விண்ணப்பம் கோரப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.
5 வருடங்களுக்கு முன்னர் உயர் நீதி மன்றம் வழங்கிய ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் மாத்திரமே இருக்கலாம் என்ற தீர்ப்பை பிரபல்யப் பாடசாலைகளில் மாத்திரம் சற்று மாற்றியமைத்து 40 ஆக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.