தீ விபத்துக்குள்ளான கப்பலினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இழப்பீடு உண்டு

Date:

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் குறிப்பிட்ட கப்பல் கம்பெனி மூலாகவும் காப்புறுதி நிறுவனத்தின் ஊடாகவும் இழப்பீட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூலம் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பீடு செய்து நீதிமன்றத்திற்கு தகவல்களை அறிக்கையிட நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார். இந்த தீ விபத்து மூலம் சுற்றாடலுக்கும், இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீன்பிடித் தொழிலுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர நீர்கொழும்பு கண்டல் தாவர கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கப்பலில் ஏற்பட்ட தீ தற்போது பெரும்பாலும் கட்டுப்படுத்த பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...