பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கின்ற போதிலும் இன்று (29) முதல் மூன்று நாட்களுக்கு பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகர்கள் உள்ளிட்டோர் பொருளாதார மையங்களுக்கு வரமுடியும் எனவும் எனினும் அவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் ஜூன் மாதம் 3,4 திகதிகளில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பொருளாதார மையங்களுக்கு வருகை தர வேண்டும் என்ற காரணத்திற்காக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.