நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Date:

நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் “யாஸ்” (“YAAS”)என்ற சூறாவளியால்  வானிலையில் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

Popular

More like this
Related

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் பாகிஸ்தான்!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கியுள்ள மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர...

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR நடைமுறை

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...

12 வயது சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை:எல் சால்வடார் அரசு

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 12 வயது சிறுவர்களுக்கும் ஆயுள் தண்டனை...

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார...