நேற்றைய தினம் நாட்டில் போடப்பட்ட தடுப்பூசிகளின் விபரம்

Date:

நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 80,277 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 3,335 பேருக்கு ரஸ்யாவின் ஸ்புட்னிக் V (sputnik v) தடுப்பூசியும், 76,942 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியும் நேற்றைய தினம் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி, நாட்டில் இதுவரை 14,673 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 150,606 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்றைய தினம் 10,189 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 231,557 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...