பலஸ்தீனத்தின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் நேற்றிரவு முஸ்லிம்களின் புனித ரமழான் மாதத்தின் மிகச் சிறந்த இரவாகக் கருதப்படும் லைலத்துல் கதிர் இரவில் ஒன்று திரண்டு இருந்த முஸ்லிம்கள் மீது இஸ்ரேலிய படையினர் நடத்திய தாக்குதலில் 90 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலிய படை அதிகாரி ஒருவரும் இந்த சம்பவத்தில் காயம் அடைந்துள்ளார் .
அல் அக்ஸா பள்ளி வாசலின் பழைய ஜெரூஸலம் நகர வழி ஊடான டமஸ்கஸ் நுழைவாயில் பகுதியில் ஒன்று திரண்டிருந்த மக்கள் மீது இஸ்ரேல் படைகள் ஸ்டன் கிறனேட் எனப்படும்
அதிர்ச்சியூட்டும் கை குண்டுகளை வீசியும் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் நீர்த்தாரைகள் பாய்ச்சியும் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பலஸ்தீனர்களை ஜெரூஸலத்தில் இருந்து முற்றாக அகற்றிவிட்டு அந்த பகுதியில் யூத குடியேற்றங்களை நிறுவுவதற்காக இஸ்ரேலிய படையினர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் புனித ரமழான் மாதத்தில் அந்தப் பிரதேசத்தில் வழிபாடுகளில் ஈடுபட
ஒன்று கூடிய மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட தாக்குதலில் 200 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர். 17 இஸ்ரேலிய போலீசாரும் காயமடைந்துள்ளனர்
அல் அக்ஸா முஸ்லிம்களின் புனித பிரதேசங்களில் ஒன்றாகும் அவர்கள் முதலாவதாக எதிர்நோக்கி தொழுத திசையும் இந்த பள்ளிவாசல் ஆகும். ஒவ்வொரு ரமழான் மாதத்திலும் கடைசி வெள்ளிக்கிழமை இந்தப் பள்ளிவாசலை இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிப்பதற்கான பிரார்த்தனைகளை புரிவதற்காக மக்கள் இந்த பகுதியில் ஒன்று சேர்வது வழக்கமாகும்.
காணொளி 👇
https://www.bbc.com/news/world-middle-east-57044000