பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் அடங்கிய கைநூல் இந்த வார இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இம்முறையும் ஒன்லைன் மூலமாகவே விண்ணப்பங்கள் கோரப்படும் என்றும் விண்ணப்பிப்பதற்கு மூன்றுவார கால அவகாசம் மாத்திரமே வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதே நேரம் இது தொடர்பாக விளக்கமளிக்கும் அமர்வொன்று இன்று மாலை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.