பாலஸ்தீனியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் முன்வந்துள்ளது.
சவூதி அரேபியாவிற்கு மூன்று நாள் விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மன்னன் முஹம்மத் பின் சல்மானுடன் ஜித்தாவில் வைத்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமை மற்றும் 1967க்கு முன்பிருந்த எல்லை பிரச்சினை உட்பட ஜெரூசலமை இஸ்ரேலிடமிருந்து விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையாக இது அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.