புத்தளம் நகர சபை தலைவர் கே எ பாய்ஸ் காலமானார், இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்துல் பாயிஸின் சாரதி உள்ளிட்ட மூவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மூவரும் மதுபோதையில் இருந்துள்ளமை போலீசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
புத்தளம் நகர பிதா கே எ பாய்ஸ் திடீர் விபத்து ஒன்றில் நேற்று மாலை காலமானார். இந்த விபத்து தொடர்பில் சந்தேகம் காணப்படுகின்ற நிலையிலேயே, அவரது சாரதி உள்ளிட்ட மூவர் புத்தளம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சம்பந்தமான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.