புனித தோமையார் ஆலயத்தின் மீது விழுந்த இடி, மின்னல் தாக்கம்!

Date:

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஆக்காட்டி வெளி கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது இன்று (06) மாலை இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டது.

இன்று மதியம் இடி, மின்னல் உடன் கூடிய மழை பெய்த நிலையில் மதியம் 2.30 மணி அளவில் குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

இதன்போது, ஆலயத்தினுள் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த மூவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

அனர்த்தத்தில் ஆலயத்தில் மேல் கூரை சேதமடைந்துள்ளது.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினர், பொது மக்கள் இணைந்து ஆலயத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...