பொரல்ல பகுதியில் தப்பிச் சென்ற ஒரு கொரோனா நோயாளியைக் கண்டுபிடிக்க பொலிசார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 26 ஆம் திகதியன்று இவரிடம் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் இவர் கொவிட் தொற்றுக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால் குறித்த நபர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். 28 வயதுடைய சங்கீத் தனுஷ்க எனும் நபர் தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்ள காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
தகவல்களுக்கு 119 அல்லது 0112694019 ஐ அழைக்கவும்
(பொலிஸ் ஊடகங்கள் வெளியிட்ட படம்)