பொலிஸ் பாதுகாப்பில் உள்ளோரை சுட்டுக் கொல்வது இலங்கையின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் – முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு!

Date:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தற்போதைய அரசாங்கத்தின் மீது பாரிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவதானது அந்த குற்றச்சாட்டுக்களை மேலும் வலுப்படுத்துவதாகவே அமையும். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இலங்கை சர்வதேசத்தின் மத்தியில் தனித்து விடப்படும் அபாயம் காணப்படுவதோடு, எமக்கான வரப்பிரசாதங்கள் சலுகைகளும் அற்றுப்போகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

குற்றச் செயல்கள் தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் நடைபெற்ற போதும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

எனவே மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களிலிருந்து மீள்வதற்கு பதிலாக மீண்டும் மீண்டும் அதே தவறையே அரசாங்கம் செய்து வருகிறது.

கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் சுட்டுக் கொல்லப்படுவது மிகவும் பாரதூரமானதொரு விடயமாகும். இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினையுமாகும்.

வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு, இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் இவ்வாறான கைதிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , நீதிமன்றத்தின் ஊடாக அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதனை விடுத்து அரசாங்கம் கைதிகளை வேறுமுறையில் கையாளுமெனில் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் பாரிய நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நேரிடும்.

எனவே நாட்டின் நற்பெயருடன் இவ்வாறு விளையாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். இதற்கு முன்னரும் இந்த அரசாங்கத்தின் மீது இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுகளிலிருந்து மீள்வதற்கு பதிலாக தொடர்ந்தும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் சர்வதேசத்திடமிருந்து எமக்கு கிடைக்கப் பெறும் சலுகைகள், வரப்பிரசாதங்கள் அனைத்தும் இல்லாமல் போகக் கூடும் என்றார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...