மதுபான விற்பனை நிலையங்களை மூடுங்கள்! – ஜனாதிபதியிடம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

Date:

இலங்கையிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், புகைப்பிடிக்காதபடி மக்களை ஊக்குவிப்பதற்கும், மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுவதற்கும் முன்வருமாறும் ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்திய நிபுணர் ஷெனால் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்,

“நாட்டில் கோவிட் வைரஸ் வேகமாகப் பரவி வருவதால், அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கும், புகைப்பிடிப்பதைத் தடுப்பதற்கு அதனுடன் தொடர்புடைய அனைத்துக் கடைகளையும் உடனடியாக மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும். மேலும், இது கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தவும் உதவும். மக்கள் மதுபானங்களை வாங்குவதற்கும், புகைப்பிடிப்பதற்கும் அல்லது அவற்றை உட்கொள்வதற்கும் பல இடங்களில் ஒன்று கூடுவார்கள்.

அவர்களில் பெரும்பாலானோர் வீடுகளில் நடைபெறுகின்ற விருந்துபசார நிகழ்வுகளில் கலந்துகொண்டு அங்கே ஒன்றுகூடுவார்கள்.

தற்போது கோவிட் வைரசுக்கு எதிராக நாடு போராடி வரும் சூழ்நிலையில், அந்தப் பழக்கங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” எனத் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும், முன்னதாக கோவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மாலை 6 மணியுடன் மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...