மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் மீது இஸ்ரேல் படையினர் இன்று காலையும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Date:

  1. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உள்ள முஸ்லிம்களின் மூன்றாவது புனித ஸ்தலமான al-aqsa பள்ளிவாசலில் இன்று காலை வழிபாட்டுக்காக வந்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் படையினர் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். குறிபார்த்து சுடும் பிரிவினரும் இந்த தாக்குதலில் பங்கேற்றுள்ளனர். ரப்பர் தோட்டாக்கள் கண்ணீர்புகை குண்டுகள் என்பனவும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாலஸ்தீனத்தில் இன்று ரமழான் மாதத்தின் 28 ஆவது நாள் ஆகும். இன்றைய தினம் காலையில் வழிபாட்டுக்காக குழுமியிருந்த மக்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

அல் அக்ஸா பள்ளிவாசல் பகுதியை சுற்றி யூதர்கள் ஒரு ஊர்வலத்திற்காக காத்திருந்த வேளையிலேயே முஸ்லீம்கள் மீது யூத படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். கிழக்கு ஜெருசலத்தை 1967ஆம் ஆண்டு இஸ்ரேல் படையினர் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்த தினத்தை நினைவு கூறும் வகையில் யூதர்கள் ஜெரூஸலம் தினம் கொண்டாடுவது வழக்கமாகும். அந்த தினத்தை அவர்கள் வேண்டுமென்றே முஸ்லிம்களை ஆத்திரமுட்டச் செய்யும் வகையில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் ஊடாக ஊர்வலமாகச் சென்று கொண்டாடுவதுண்டு அவ்வாறான ஒரு ஊர்வலத்துக்கு இன்று அவர்கள் தயாராக இருந்த வேளையிலேயே இஸ்ரேல் படையினர் முஸ்லிம்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். சற்றுமுன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின் படி தொடர்ந்தும் அந்தப் பிரதேசத்தில் பதற்ற நிலை காணப்படுவதாகவும் இஸ்ரேலிய ஹெலிகாப்டர்கள் அந்த பிரதேசத்தை சுற்றி வட்டமிட்டட வண்ணம் இருப்பதாகவும் ஊர்வலம் நடக்கும் பட்சத்தில் அது பெரும் கைகலப்பாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

காணொளி 👇

https://www.aljazeera.com/news/2021/5/10/israeli-forces-raid-al-aqsa-compound-live

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...