மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் அரச மற்றும் தனியார் துறையின் ஊழியர்கள் போக்குவரத்து செய்வதற்காக சில புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த புகையிரதம் வேறு எந்த துணை புகையிரத நிலையங்களிலும் நிறுத்தப்படமாட்டாது எனவும் புகையிரதத்தில் பயணிப்பவர்கள் தங்களது அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக சேவை அடையாள அட்டை மற்றும் நிறுவன பிரதானியின் கடிதத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த புகையிரத சேவைகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.