ரயில்வே திணைக்களத்தின் 40 ஊழியர்கள் கொவிட் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உதவிப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன நேற்று (17 ) தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் சங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்றும், ரயில்வே தொழிலாளர்களுக்கு உடனடியாக கொவிட் தடுப்பூசி வழங்குமாறு நான்கு முறை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எழுத்துபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இதனால் ஊழியர்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளதாகவும், பயணிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ள அவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவது சுகாதார அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
