கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஒன்பது நெடுஞ்சாலைகள் மற்றும் மாற்று சாலை வலையமைப்பை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளது என நெடுஞ்சாலைகள் அமைச்சர் அமைச்சர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதற்காக ரூ .23,380 மில்லியன் செலவிட வேண்டியிருக்கும் என அவர் தெரிவித்தார்.
அதன்படி, நாடாளுமன்றத்தைச் சுற்றியுள்ள சாலை வலையமைப்பு, கொழும்பு-ஹொரன சாலை மற்றும் கடுவெல-மாலபே-கொழும்பு சாலை ஆகியவை நிர்மாணிக்கப்படும்.
மேலும், கிரிபத்கொட – பத்தரமுல்ல சாலை வலையமைப்பு, கொழும்பு – அம்படலே சாலை அமைப்பு, பேஸ்லைன் சாலையை இணைக்கும் சாலைகள் மற்றும் சந்திகள் இதன் கீழ் மேம்படுத்தப்படும்.