வயது அடிப்படையில் இதுவரை கொவிட் மரணங்களின் எண்ணிக்கை!

Date:

2021 மே மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 44 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (21) உறுதிப்படுத்தினார்.

அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 1,132 ஆகும்.

அவர்களில் 23 பேர் 71 வயதைக் கடந்தவர்களாவர். 11 பேர் 61 தொடக்கம் 70 வயதிற்குட்பட்டவர்கள், 7 பேர் 51 தொடக்கம் 60 வயதிற்குட்பட்டவர், இருவர் 31 தொடக்கம் 40 வயதிற்குட்பட்டவர், ஒருவர் 21 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

இவர்களின் மரணங்களுக்கான அடிப்படைக் காரணிகளாக கொவிட் நியூமோனியா, நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுடன் உருவாகிய சிக்கலான நிலைமைகள் காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 30 பேர் ஆண்களாவதுடன், ஏனைய அனைவரும் பெண்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இறந்தவர்களின் பிரதேசங்களாக,

அட்டவீரகொல்லாவ, ஹொரம்பல்ல, அம்பலாங்கொட, கலல்கொட, ஹிந்தகல, புலத்சிங்கள, ஹொரன, கல்பாத்த, குடாவஸ்கடுவ, பிஹிம்புவ, அநுராதபுரம், மன்னார், ரத்கம, இமதூவ, மக்கொன, மத்துகம, வேயங்கொட, அத்துருகிரிய, செவனகல, மல்லாவ, கிரிமெட்டியாவ, மேல் கட்டுனேரிய, கண்டி, பரகஸ்தோட்டை, களுத்துறை வடக்கு, வலல்லாவிட்ட, பேருவளை, பயாகல, கொழும்பு 12, கொழும்பு 02, பொல்கஸ்ஓவிட்ட, காலி, நாக்கவத்த, றாகம, பன்னிபிட்டிய, ஹோமாகம, நாரங்கொட, கனேபொல, கொக்கரல்ல, அலஹிட்டியாவ, ஹிந்தகொல்ல, பண்டாரகொஸ்வத்த போன்ற பிரதேசங்களை வதிவிடமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...