10 நாட்களில் 10 ஆயிரம் கட்டில்கள் ஏற்பாடு செய்யப்படும்- பசில் ராஜபக்ஷ உறுதியளித்தார்!

Date:

பத்து நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்கள் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்படும் என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைக் குறிப்பிட்ட ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

இந்த பத்தாயிரம் கட்டில்களுக்கு மேலதிகமாக மாவட்ட மட்டத்தில் மேலதிக சிகிச்சை நிலையங்களை இனங்கண்டு அவற்றுக்கு தேவையான கட்டில்களும் உபகரணங்களும் வழங்கப்படும்.

 

இதன் பொறுப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர்களுக்கு வழங்கப்படும். இலங்கை பொறியியலாளர் முன்னணி வைத்தியசாலைகளின் தொழில்நுட்ப குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு முன் வந்துள்ளது என்றும் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...