10 மில்லியன் ரூபா பணப் பரிமாற்றம் தொடர்பில் இளைஞன் கைது!

Date:

10 மில்லியன் ரூபா பணப்பரிமாற்றம் தொடர்பில் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோதர பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுபிட்டிய பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை முன்னெடுத்துச் சென்று, தொலைபேசிகளை வழங்குவதாக கூறி சுமார் 10 மில்லியன் ரூபாவினை 80 வாடிக்கையாளர்களிடம் இருந்து முற்பணமாக பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் குறித்த இளைஞன் கொள்ளுபிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...