தமிழ் மக்களின் அகதி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து நான்கு லட்சம் பொது மக்களை மிகவும் பாதுகாப்பாக மீட்டெடுத்தோம். அதேபோன்று, தமிழ் மக்களின் அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், வடக்கு கிழக்கு மக்களை மீள்குடியேற்றினோம்.
அதுமாத்திரமன்றி, நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து சுபீட்சமான ஒரு எதிர்காலத்தை உருவாக்கியிருக்கிறோம் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.