1948ல் இடம்பெற்ற டேர்யாஸின் படுகொலைகளை நினைவுகூறும் பலஸ்தீன மக்கள்

Date:

பலஸ்தீன பிரதேசமான டேர்யாஸின் பகுதியில் 1948 ஏப்பிரல் 9ம் திகதி சியோனிஸ யூத பயங்கரவாதக் குழுக்களால் அரங்கேற்றப்பட்ட படுகொலைகளை பலஸ்தீன மக்கள் வருடந்தோறும் நினைவு கூர்ந்து வருகின்றனர். இஸ்ரேல் என்ற சட்ட விரோத நாட்டை ஸ்தாபிக்கும் நோக்கில் பலஸ்தீன மக்களை தமது தாயக பூமியில் இருந்து வெளியேற்றவே இந்த கொலைகள் இடம்பெற்றன.

இப்போது இஸ்ரேல் என அழைக்கப்படும் அன்றைய பலஸ்தீன தேசம் அப்போது துருக்கி சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தது. முதலாம் உலகப் போரில் அது பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அன்று முதல் பிரிட்டிஷ் அதிகார பீடம் சியொனிஸ யூத கச்திகளோடு இணைந்து உலகம் முழுவதிலும் இருந்து யூதர்களைக் கொண்டு வந்து பலஸ்தீன பிரதேசத்தில் குவிக்கத் தொடங்கியது.

பலஸ்தீனர்களின் எதிர்ப்பு
இந்த விடயத்தில் பலஸ்தீன மக்கள் காட்டிய எதிர்ப்பை முறியடிப்பதற்கு மெனாச்சம் பெகின் தலைமையிலான ஹகானா என்ற பயங்கரவாத குழ அந்த மக்கள் மீது கொலை வெறியை கட்டவிழத்து விட்டது. இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என வயது வித்தியாசம் இன்றி பால் வித்தியாசம் இன்றி 254 பேர் டேர்யாஸின் என்ற கிராமத்தில் கொல்லப்பட்டனர்.

ஜெரூஸலத்தில் இருந்து ஒரு சில மைல் தொலைவில் அமைந்துள்ள இந்தக் கிராமத்தில் இடம்பெற்ற படுகொலைகள் வியட்னாமில் இடம்பெற்ற மைலாய் படுகnhலைகளைப் போன்று மனித வரலாற்றின் கொடிய சம்பவங்களில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு தலைமை தாங்கிய மெனாச்சம் பெகின் யூதர்களின் வரலாற்றில் இது ஒரு மறக்க முடியாத தினம் என போற்றினார்.சகல யுது பயங்கரவாத குழுக்களும் இந்தத் திசைநோக்கி வெறித்தனமாக முன்னேறிச் சென்று இந்த கொலைகளில் ஈடுபட்டன.

நிராயுதபாணியான அப்பாவி பலஸ்தீன அரபு மக்கள் கதறக் கதற வெட்டியும் குத்தியும் சுட்டும் கொல்லப்பட்டனர்.
இந்தப் பாதகச் செயலை நினைவு கூறும் 83 வயதான ஒரு பலஸ்தீன மூதாட்டி “யூதர்கள் கிராமத்தைச் சூழ்ந்து கொண்டனர். பெண்களும் சிறுவர்களும் சிதறி ஓடத் தொடங்கினர். ஆனால் யுதர்களின் ஆயத முனையில் இருந்து அவர்களால் தப்ப முடியவில்லை. என்னுடைய 16 வயது சகோதரனை அவர்கள் வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள தோட்டத்துக்கு இழுத்துச் சென்றனர். அவனை அஙகு தலைகுனிந்து நிற்க வைத்து தலையில் ஐந்து தோட்டாக்களைப் பாய்ச்சினர். என் கண் எதிரிலேயெ அவனை சுட்டுக் கொன்றனர்” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

இந்தப் படுகொலைச் சம்பவம் பற்றி பிரபல வரலாற்று ஆசிரியர் ஆர்னொல்ட் டொயின்பே தனது “A Study of History” வரலாறு பற்றிய ஒரு ஆய்வு எனும் நூலில் “பலஸ்தீன அரபு மக்களுக்கு எதிராக சியொனிஸ யூதர்களால் செய்யப்பட்ட இந்த ஈனச் செயல் யூதர்களுக்கு எதிராக நாஸிக்கள் செய்த குற்றங்களோடு ஒப்பிடக் கூடியவை. டேர்யாஸினில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பேதமின்றி கொல்லப்பட்டமை பெருந்தொகையான பலஸ்தீன மக்களை அங்கிருந்து வெளியெற்றியது. பலஸ்தீன அரர் மக்கள் அச்சம் காரணமாக பாரிய அளவில் அங்கிருந்து வெளியெறினர். 1948 மே 15 முதல் அந்த ஆண்டு இறுதி வரை இந்த வெளியேற்றம் இடம்பெற்றது. அங்கு சிந்திய இரத்தம் இர்குன் மெனாச்சம் பெகினின் தலையில் காணப்பட்டது. 1948 மே 15ல் தொடங்கிய பலஸ்தீன மக்களின் வெளியெற்றத்தக்குப் பின் அந்த இரத்தம் சகல இஸ்ரேலியர்கள் மீதும் காணப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றங்களைப் புரிந்தமைக்காக மெனாச்சம் பெகினின் தலைக்கு பத்தாயிரம் ஸ்ரேலிங் பவுண் சன்மானம் அறிவித்தது பிரிட்டிஷ் அரசு பலஸ்தீனத்தின் உத்தியோகப்பூர்வ யூத தலைமைத்துவம் அவரை ஒரு பயங்கரவாதியாகப் பிரகடனம் செய்தது. அவ்வளவுதான்.
இந்தச் சம்பவம் ஒரு முடிவாக அமையவில்லை. அதே இரத்த வெறியோடு யூத கொலை வெறியர்களின் கோரத் தாண்டவம் நஸிருத்தீன் என்ற கிராமம் உற்பட இன்னும் பல கிராமங்களிலும் தொடர்ந்தது. இர்குனின் கொடிய படையினரின் இந்தத் தாக்குதல்களில் இருந்து சொற்பத் தொகையினர் மட்டுமே தப்ப முடிந்தது. ஏனையவர்கள் அனைவரும் கொன்று குவிக்கப்பட்டனர்.

இஸ்ரேலிய பயங்கரவாதத்தின் ஞானத் தந்தை மெனாச்சம் பெகின் பின்னர் அந்த நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்தார். இவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கூட வழங்கப்பட்டது


1948 மே 5ம் திகதி ஹகானா பயங்கரவாத கோஷ்டி மஸ்ரத் அல் கோரி என்ற இடத்திலும் இதே விதமாக ஒட்டு மொத்த கொலைகளைப் புரிந்தது. இங்கும் பெண்களினதும் சிறுவர்களினதும் தலைகள் துண்டாடப்பட்டு கொல்லப்பட்டனர். இன்னும் சிலர் கண்டதுண்டமாக வெட்டப்பட்டனர். இளைஞர்கள் தீயில் வாட்டி எடுக்கப்பட்டனர். சில இடங்களில் வீடுகளுக்குள் வைத்து மக்களைப் பூட்டி தீ மூட்டப்பட்டது. ஹகானா குழுவினர் இத வேடிக்கைப் பார்த்த வண்ணம் வெளியில் நின்றனர். சிலரை வேண்டும் என்றே தப்ப வைத்தனர். வெளியில் போய் உங்களுக்கு நேர்ந்த கதியை அரபுலகுக்கு சொல்லுங்கள். முடியுமானால் அவர்களை வந்து உங்களைக் காப்பாற்றச் சொல்லுங்கள் என்று கூறி நகைத்தனர்.

1948 மே 6ல் ஒரு பள்ளிவாசல் முற்றாகத் தகர்க்கப்பட்டது. அல் சைதூன் எனும் இடத்தில் பள்ளிவாசலுககுள்; மக்களை வைத்துப் பூட்டி அவர்களது தலையில் பள்ளிவாசல் இடிந்து விழும் வகையில் அது வெடிக்க வைத்து தரைமட்டமாக்கப்பட்டது. 1948 மே 13ல் காஸாவில் இருந்து ஒட்டு மொத்த மக்களும் விரட்டி அடிக்கப்பட்டனர். இங்கு கர்ப்பிணிப் பெண்கள் மீது அவர்களின் வயிற்றுள் உள்ள சிசு அழியும் வகையில் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. கடையில் ஒரு கிராமம் முழுவதும் டைனமைட் வைத்து தகர்க்கப்பட்டது.

அன்று முதல் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்கள் அகதி முகாம்களுக்குள் தள்ளப்பட்டு அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். இன்னமும் கூட அந்த மக்கள் தமக்கு சட்ட ரீதியான உரிமை உள்ள காணிகளின் பத்திரங்களையும் வீடுகளின் சாவிகளையும் கூட தம்வசம் வைத்துள்ளனர்.
இஸ்ரேலுக்கு எதிரான பரவலான கண்டனங்கள் உலகில் எழுந்துள்ளது.

The New York Review of Books  இல் ஐ.கு. ஸ்டோன் என்பவர் எழுதி உள்ள ஒரு அக்கத்தில் சியோனிஸம் அதன் ஆரம்பம் முதலே அரபு பிராந்தியத்தில் தன்னை ஒரு பெரும் சாம்ராஜ்ஜியமாக கட்டி எழுப்புவதை நோக்காகவே கொண்டுள்ளது. அந்த வகையில் சியோனிஸ யூதர்கள் தான் மத்திய கிழக்கின் பயங்கரவாதத்தின் ஞானத் தந்தைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறேனும் இந்த பயங்கரவாதத்தின் ஞானத் தந்தை பிற்காலத்தில் இஸ்ரேலின் பிரதமரானார். லெபனானில் உள்ள ஷப்ரா மற்றும் ஷடில்லா அகதி முகாம்களிலும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி அவர் இதே காரியத்தை தொடர்ந்தார். ஆனால் வெற்கக் கேடான விடயம் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் ஆட்டிப் படைக்கும் யூத சக்திகளின் தூண்டலால் சமாதானத்துக்கான நோபல் பரிசும் அவருக்கு வழங்கப்பட்டது.

அமெரிக்காஇ ஐரோப்பாஇ ரஷ்யா மற்றும் சூழவுள்ள அரபு உலக கொடுங்கோலர்கள் இஸ்ரேலை இன்னமும் கண்மூடித்தனமாக ஆதரித்து வருகின்றனர். மனித உரிமைகளின் காப்பாளர்களாக தம்மை காட்டிக் கொள்ளும் இவர்கள் பலஸ்தீன மக்களை முற்றாகக் கைவிட்ட விட்டனர். அதனால் அவர்கள் இன்றும் பலஸ்தீன மக்களை ஈவு இரக்கமின்றி வதைத்து வருகின்றனர்.

குவித்து வைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட பலஸ்தீன மக்களின் சடலங்கள்
குவித்து வைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட பலஸ்தீன மக்களின் சடலங்கள்
தமது சொந்த இடங்களை விட்டு வெளியெறும் பலஸ்தீன மக்கள்
தமது சொந்த இடங்களை விட்டு வெளியெறும் பலஸ்தீன மக்கள்
உயிர் தப்பிய ஒரு மூதாட்டி
உயிர் தப்பிய ஒரு மூதாட்டி

 

லத்தீப் பாரூக்

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...