2021 ஆம் ஆண்டுக்கான அரச பெருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக இன்று புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது. இம்முறை அரச வெசாக் விழாவை யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீப ரஜமகா விகாரையில் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆனால் தற்போது நாட்டில் மோசமடைந்து வரும் கொரோணா மூன்றாவது அலைத் தாக்கம் காரணமாக இந்த வெசாக் விழாவை ரத்து செய்வதாக இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது .
எவ்வாறாயினும் விரைவில் வேறு ஒரு இடத்தில் இந்த வெசாக் விழாவை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்படும் என்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்