8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளுடன் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நேற்று காலை 38 வயதான இந்த நபர் கிளிநொச்சி சாந்திபுரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இன்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார். இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நோட்டுக்கள் அனைத்தும் 1000 ரூபாய் நோட்டுக்கள் என்றும் அவர் தெரிவித்தார். இத்தகைய கள்ளநோட்டுகள் அண்மைக்காலங்களில்
பெருமளவு பாவனைக்கு வந்துள்ளதால் மக்களை அவதானமாக இருக்குமாறும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
8லட்சத்து 15 ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள் சிக்கின
Date:
