இந்தியாவிலிருந்து 35 பேருடன் இலங்கை வந்த விமானம்

Date:

இந்தியாவின் டெல்லியில் இருந்து 35 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் குறித்த இந்திய விமானம் இன்று(19) அதிகாலை நாட்டுக்கு வந்துள்ளது.

ஏர் இண்டியா விமான சேவைக்கு சொந்தமான இவ்விமானத்தில் 19 இலங்கையர்களும், இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் 16 உத்தியோகத்தர்களும் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியாவில் இருந்து பயணிகள் விமானங்கள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வெளிவிவகார அமைச்சின் விசேட அனுமதியுடன் இந்த விமானம் இலங்கை வந்துள்ளதுடன், இவ்வாறு வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...