இன்றுமுதல்(02) இலங்கையர்கள் யாரும் சிங்கப்பூருக்குள் பிரவேசிக்க முடியாது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோணா தொற்றின் காரணமாகவே இலங்கையர்களுக்கு இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது .
சிங்கப்பூர் வழியாக வேறு நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் கூட சிங்கப்பூரில் தரையிறங்க முடியாது என்று இந்த தடை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சிங்கப்பூர் விமான சேவை இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சரக்கு விமான சேவையை வழமைபோல் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.