இஸ்ரேல் தலைநகரான டெல் அவிவ் மீது பாலஸ்தீன காசா படைகள் சரமாரியாக ராக்கெட் தாக்குதலை நடத்தின.
இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் காணப்படுகிறது. மக்கள் வீதிகளில் உயிரைக் காக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
பாலஸ்தீனர்களின் படைகள் காசாவில் பதுங்கியிருந்த இடத்தின் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.இதில் 83 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பழிக்குப் பழிவாங்கும் விதமாக இஸ்ரேல் நகரங்கள் மீது பாலஸ்தீன படையினர் டஜன்கணக்கில் ராக்கெட்டுகளை ஏவித் தாக்குதல் நடத்தினர்.
இதனால் பல கட்டடங்கள் சேதம் அடைந்தன.இஸ்ரேல் காவல்துறையினர் வன்முறையில் ஈடுபட்ட 374 பேரை கைது செய்துள்ளனர்.
அரபு வன்முறை கும்பலின் தாக்குதலை நியாயப்படுத்த முடியாது என்று கண்டனம் தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதான்யாகு வீடியோ வாயிலாக செய்தியாளர்களிடம் பேசுகையில் , ராணுவத்தை அனுப்பி நிலையை கட்டுக்குள் கொண்டு வரத் திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.