உள்நாட்டவர்களும் இனி அமெரிக்க டொலர் பாவிக்கலாம்!

Date:

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹோட்டல்களில் சேவைகளை பெற்றுக்கொள்ளும் உள்ளூர்வாசிகள் அவற்றுக்கான கொடுப்பனவை இனிமேல் அமெரிக்க டொலரிலும் செலுத்தலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

உள்ளூர் ஹோட்டல்களில் சேவைகளை பெற்றுக்கொள்ளும் உள்ளூர்வாசிகள் அமெரிக்க டொலரிலும் தமது கொடுப்பனவுகளை இனிமேல் செலுத்தலாம் என்று அனுமதி அளிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார் .

இதுவரை காலமும் ஹோட்டல்கள் வெளிநாட்டவர்களிடமிருந்து மட்டுமே வெளிநாட்டு நாணயங்களில் கொடுப்பனவுகளை பெற்று வந்தன. ஆனால் இனி அமெரிக்க டொலரில் உள்நாட்டவர்களிடமிருந்தும் தாங்கள் வழங்கும் சேவைகளுக்கான கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ள இந்த புதிய வர்த்தமானி அறிவித்தல் அனுமதி அளித்துள்ளது .

 

உள்ளூர்வாசிகளிடமிருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கி சுழற்சி முறைக்குள் கொண்டு வருவதை நோக்காகக் கொண்டு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உள்நாட்டவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் வெளிநாட்டு நாணயத்தை குறிப்பிட்ட ஹோட்டல்கள் இரண்டு வார காலத்துக்குள் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாணயமாற்று நிறுவனத்திடம் அல்லது வங்கி ஒன்றில் செலுத்தி அதன் மூலம் அவர்கள் உள்ளூர் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

 

கடந்த ஆண்டு உள்நாட்டு அவர்கள் தம்வசம் வைத்திருப்பதற்கான அமெரிக்க டொலரின் பெறுமதியை 10 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரமாக அரசாங்கம் அதிகரித்தது அதன்பின் வெளிநாட்டு நாணயங்களின் செயற்பாடு உள்ளிட்டவர்களிடம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது இதைத் தவிர்க்கும் வகையிலேயே வங்கி முறைமைக்குள் வங்கி சுழற்சி முறைமைக்குள் உள் நாட்டில் புழக்கத்தில் உள்ள நாணயங்களை கொண்டு வரும் வகையில் இந்த தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...