கொழும்பு துறைமுக பகுதியில் எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விடயம் தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணையை முன்னெடுக்க 10 அதிகாரிகள் கொண்ட குற்றப்புலனாய்வு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் கேப்டன் மற்றும் தலைமை பொறியிலாளரிடம் வாக்குமூலம் இன்று(31) பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விசாரணை வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டலில் வைத்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
மேலும், கப்பலின் பணியாளர் குழுவினரிடம் எதிர்வரும் நாட்களில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.