“எமது அணி வீரர்கள் அனைவரும் வீடு திரும்பிய பின்னரே நான் எனது ஊரிற்கு செல்வேன்”-அணித்தலைவர் தோனி!

Date:

இந்தியாவில் கொவிட் தொற்றின் நிலை தீவிரமென்பதால் ஐ.பீ.எல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் , சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் பத்திரமாக வீடு போய் சேர்ந்த பிறகே நான் எனது வீடு திரும்புவேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (05) காலை காணொளி அழைப்பு மூலம் தனது அணி வீரர்களுடன் கதைத்த தோனி ” முதலில் வெளிநாட்டு வீரர்கள் தமது நாடுகளுக்குத் திரும்ப முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதன் பிறகு உள்ளூர் வீரர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியும் என தெரிவித்துள்ளார்.

அணி வீரர்கள் அனைவரும் சென்ற பிறகு தான் நான் எனது ஊரான ராஜ்சிக்கு செல்வேன் அதுவரை டெல்லியில் தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

மைக்கல் ஹஸி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பதால் அவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாடுகளுக்குப் போக ஆரம்பித்துள்ளனர்.

இந் நிலையில் இன்று (06) மாலை தோனி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தனது சொந்த ஊருக்கு திரும்ப உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...