ஒக்சிசன் நெருக்கடி ஏற்படலாம் | மருத்துவ நிபுணர்கள் சங்கம்

Date:

இலங்கையில் ஒக்சிசன் நெருக்கடி ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்களின் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது கொவிட் நோயாளிகளிற்கு ஒக்சிசசே மிகஅவசியமானதாக உள்ளது என தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர்களின் சங்கம் ஒக்சிசன் குறைந்தளவே கையிருப்பில் இருக்கலாம் இதன் காரணமாக அரசாங்கம் அவசரநடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரசிற்கான சிகிச்சையொன்று இல்லாததன் காரணமாக அறிகுறிகளை அடிப்படையாக வைத்து கிசிச்சை வழங்குவதே இடம்பெறுகின்றது என மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் விடயத்தில் ஒக்சிசனும் தீவிர கிசிச்சை பிரிவும் முக்கியமானவை என தெரிவித்துள்ள வைத்தியர் பேரிடர் உருவாவதை தடுக்கவேண்டும் என்றால் தீவிரகிசிச்சை பிரிவில் உள்ள கட்டில்களிற்கு தடையற்ற ஒக்சிசன் விநியோகத்தை உருதி செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வலுவான நிதிவளங்களை கொண்ட பிராந்திய வல்லரசான இந்தியாவே ஒக்சிசன் இன்மையால் பெரும் நெருக்கடியை எதிர்கொள்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...