சுற்றுலா குமிழி முறையின் கீழ் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இதை அவர் டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ரஷ்யாவின் முன்னணி விமான நிறுவனங்களுடன் ஏற்கனவே இந்த விடயம் குறித்து கலந்துரையாடியதாகவும் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை வாரத்திற்கு இரண்டு முறை அழைத்து வர ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏற்கனவே ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
இந்த முறை தனது கவனம் நாட்டின் கிழக்கு கடற்கரையை நோக்கியே உள்ளது என்றும், சுற்றுலா தலத்தை முற்றிலுமாக முடக்கி, ஒரு பாரிய சுற்றுலா மண்டலத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.