செல்வாக்கு இழந்துள்ள நரேந்திர மோடி!

Date:

ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்து மிகவும் நுட்பமான, சாணக்கியமான செயற்பாடுகள் மூலமும் தந்திரம் மிக்க தனது திருகுதாளங்கள் மூலமும்

தன்னை ஒரு பெரும் தலைவனாக தனது மக்கள் மத்தியிலும் உலக அரங்கிலும் நிலைநிறுத்திக் கொள்வதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி எடுத்த நடவடிக்கைகள் யாவும் இன்று தவிடுபொடியாகி உள்ளன.

அவரை ஒரு பெரும் வீரராக பெரும் அரசியல் தலைவராக பெரும் இராஜதந்திரியாக ஏன் கடவுளாக கூட பார்த்த இந்திய மக்கள் இன்று அவரை நேரில் கண்டால் காரி உமிழும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

உலக ஊடகங்கள் கூட ஒரு காலத்தில் அவரைப் போற்றிப் புகழ்ந்தன. ஆனால் இன்று அவரின் பண்புகளையும் அவரையும் தூற்றித் திரிகின்றன.

அகம்பாவம், ஆணவம், அதிஉயர் தேசியவாதம், அதிகார இயலாமை, இவையெல்லாம் ஒன்றிணைந்த நரேந்திர மோடி இன்று தன்னை நம்பியிருந்த இந்திய மக்களை கொரோணா பேரழிவுக்குள் தள்ளி விட்டுள்ளார் என்று ஐக்கிய ராஜ்ஜியம், அமெரிக்கா, மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளின் ஊடகங்கள் உற்பட உலக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

 

இந்திய மக்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கை முற்று முழுதாக நாசமாகி போயுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப் பெற்ற அவசர உதவிகள் கூட இன்னும் அவை அவசரமாகத் தேவைப்படும் பாதிக்கப்பட்ட இடங்களை சென்றடையவில்லை. அந்த அளவுக்கு திறமையும் திராணியும் அற்றதே மோடி அரசு என்று இராஜதந்திர வட்டாரங்கள் வசைபாடி வருகின்றன.

ஆனாலும் கூட அவர் இன்னமும் தன்னுடைய தனிப்பட்ட இமேஜை தக்க வைத்துக் கொள்வதில் தான் கவனம் செலுத்துகின்றாரே தவிர நாட்டு மக்களை தான் ஏற்படுத்திய பேரழிவிலிருந்து எவ்வாறு மீட்டெடுப்பது என்று எந்தத் திட்டமும் இல்லாத ஒரு மனிதராகவே அவர் காணப்படுகின்றார் என்று உலக நாடுகள் இன்று அவர் பற்றி தூற்றிக் கொண்டிருப்பதை நாங்கள் ஊடகங்களில் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...