ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணத்தால் குறித்த வீதியில் வாகன போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் தடைப்பட்டதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக இன்று (13) மாலை 06 மணி அளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களும், பொலிஸாரும் மண்மேட்டை பகுதி அளவில் அகற்றிய பின் 07 மணிக்கு பின்னர் ஒரு வழி போக்குவரத்து இடம்பெறுகின்றது.
எனினும், வாகன சாரதிகள் மிக அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.