கொலை செய்யப்பட்ட ரக்கர் வீரர் வஸீம் தாஜுதீனின் குடும்பத்தினர் அவருடைய கொலைக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது இப்போது கனவாகியுள்ளது .
இன்றுடன் ( மே 17 )வஸீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் பூர்த்தியாகின்றது.
ஆண்டுகள் புயலைப் போல கடந்துவிட்டன .நீதி ஒரு மாயை என்பது இந்த விடயத்தில் நிரூபணமானது.எங்களுடைய காயம் இன்னும் தணியவில்லை.இது ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த நேரத்தில் வஸீமுக்கு என்ன நடந்தது என்பது இன்னும் எங்களுக்கு புரியாத புதிராகவே இன்றுவரை உள்ளது.வஸீமின் கடைசி தருணங்களை நாங்கள் நினைத்து இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று வஸீமின் சகோதரி வைத்தியர் ஆயிஷா தாஜுதீன் நேற்று இரவு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
கார் விபத்தில் தாஜுதீன் கொல்லப்பட்டார் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது எனினும் பின்னர் அது ஒரு கொலை என தெரியவந்தது.2015 இல் பதவியேற்ற அரசாங்கம் இக் கொலை குறித்து புதிய விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.ஆனாலும் முக்கிய குற்றவாளிகளை கைது செய்வதை தவறிவிட்டது.இது குறித்த விசாரணைகளை தற்போதுள்ள அரசாங்கம் வாயை மூடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.