பொலிஸ் மற்றும் இராணுவம் இணைந்து மக்கள் மத்தியில் கொரோனா விழிப்பூட்டல்!

Date:

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து தொடர்ந்தும் பல்வேறு மக்கள் நல வேலைத்திட்டங்களை நாடு பூராகவும் முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி, வாழைச்சேனை பிரதேசத்தில் பொலிஸாரும், இராணுவமும் இணைந்து மக்கள் மத்தியில் கொரோனா நோய் தொடர்பான விசேட விழிப்பூட்டல் நடவடிக்கையை இன்று (09) மேற்கொண்டனர்.

வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜயசுந்தர தலைமையில் இடம்பெற்ற இவ் விழிப்பூட்டும் நடவடிக்கையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சீ.ஐ.சந்திரகுமார மற்றும் சித்தாண்டி இராணுவ படைப் பிரிவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு துண்டுப் பிரசுரங்கள் வழங்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.

இதன்போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதுடன், முகக்கவசத்தினை முறையாக அணியாத பலருக்கு இதன்போது பொலிஸாரினால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...