மண்சரிவில் ஆறு குடியிருப்புகள் சேதம்!

Date:

அம்பகமுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இருவேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் ஆறு குடியிருப்புகள் சேதமாகியுள்ளன.

வட்டவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுயதனிமை பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள வெளிஓயா கீழ் பிரிவில் இன்று (25) அதிகாலை மண்மேடுடன் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் கடுமையாக சேதமாகியுள்ளன.

அதே வேளை, பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லொயினோன் தோட்டப் பகுதியில் இன்று ( 25 ) மதியம் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளன.

மண்சரிவினால் உயிராபத்துக்கள் ஏற்படாத போதிலும் உடமைகள் சேதமாகி உள்ளதுடன் சேத விபரம் தொடர்பில் பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...