லேடி ரிட்ஜ்வே வைத்தியாசாலையின் முன்பாக குழப்பநிலை

Date:

கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைக்கு முன்னால் அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை வழங்குவதில் நிகழ்ந்த சிக்கல்கள் காரணமாக குழப்பமான நிலை நிலவியுள்ளது . 3000க்கும் அதிகமான மக்கள் அஸ்டிரா ஜெனேகா தடுப்பூசியை வழங்கவேண்டும் என கோரி காத்திருந்த வேளையே, பதற்ற நிலை உருவாகியுள்ளது .

மருத்துவமனைக்குள் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகின்றது என சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை தொடர்ந்து பெருமளவான மக்கள் இன்று காலை மருத்துவமனைக்கு வெளியே குவியத்தொடங்கினர்.

பலர் அந்த பகுதிக்கு சென்று, தங்களிற்கு தடுப்பூசி வழங்கப்படவேண்டும் என வேண்டுகோள் விடுக்க தொடங்கினார்கள், இதன் காரணமாக அந்த பகுதியில் சமூகவிலக்கல் முற்றாக புறக்கணிக்கப்படும் நிலையேற்பட்டது.

இரண்டாவது டோஸ் மருந்தினை அரசாங்கம் வழங்கமுடியாத நிலையில் உள்ளதால் மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துவரும் நிலையிலேயே இன்று இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராகி வரும் பாகிஸ்தான்!

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை முடக்கியுள்ள மேற்கு ஆசியப் போரை முடிவுக்குக் கொண்டுவர...

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR நடைமுறை

நாளை நள்ளிரவு முதல் எரிபொருளுக்கான QR முறைமை மீள நடைமுறைக்கு வருமென...

12 வயது சிறுவர்களுக்கு ஆயுள் தண்டனை:எல் சால்வடார் அரசு

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 12 வயது சிறுவர்களுக்கும் ஆயுள் தண்டனை...

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தின்படி, எரிசக்தி அமைச்சர் குமார...