ஷவ்வால் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று!

Date:

ஸாதிக் ஷிஹான்

ஹிஜ்ரி 1442 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று 12ஆம் திகதி புதன் கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுத் தலைவர் கலீபதுல் குலபா மௌலவி ஜே அப்துல் ஹமீத் பஹ்ஜி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஏகமனதான தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தானம் முஸ்லிம் சேவையின் ஊடாக உத்தியோகபூர்மாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக் குழு உறுப்பினர்கள், பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் அதன் பிறைக் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள அதிகாரிகள், இலங்கை வலிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள், மேமன், ஹனபி பள்ளிவால் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தலைப்பிறை தொடர்பான ஊர்ஜிதமான தகவல்கள் கிடைக்கப் பெறும் பட்சத்தில் அது தொடர்பாக தகவல்களை 0112432110, 0112451245, 0777316415 என்ற தொலைப் பேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு அறியத் தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபையின் பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது கொவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காணப்படுவதால் அதனால் ஏற்படும் பாதிப்பை கருத்திற் கொண்டு சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்றைய இந்த மாநாட்டில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...