ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்க்கும் மாநாடு எதிர்வரும் புதன்கிழமை (12) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது.
கொழும்புபெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், பிறைக்குழு உலமாக்கள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிறைக்குழு உறுப்பினர்கள் , முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், இலங்கை வளிமண்டலவியல் திணைக்கள சிரேஷ்ட உத்தியோகத்தர்கள், மேமன் ஹனபி பள்ளிவாசல் முக்கியஸ்தர்களும் இம் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் போது புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.எனவே அன்றைய தினம் மாலை பிறை பார்க்குமாறு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
அத்துடன் ,பிறை தென்பட்டமை, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினூடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் ,தலைப்பிறை சம்பந்தமான ஊர்ஜிதமற்ற தகவல்களையோ ,வதந்திகளையோ பகிர்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொடர்புகளுக்கு: 0112432110
0112451245
0777316415