கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை இம்மாதம் 19 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மனு இன்று (11) மேன்முறையீட்டு நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர மற்றும நீல் இத்தவெல ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது, ஷானி அபேசேகர சார்பில் முன்னிலையான சடடத்தரணி, தனது கட்சிக்காரர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த மனு விசாரணைக்காக திகதி ஒன்றை கோரியிருந்தார்.
அதன்படி, குறித்த மனு எதிர்வரும் 19 ஆம் திகதி நிஷ்சங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஆர்.குருசிங்க ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.